துருக்கியின் தலைநகரமான அங்காராவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (International Labor Conference ) முதலாவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கையையும் மலையக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார்.
பல நாடுகளைச் சேர்ந்த பல மொழிகள் பேசுகின்ற தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வில்
கலந்து கொண்டுள்ள போதும், தமிழ் பேசு
ம் பிரதிநிதியாக இவர் மட்டுமே பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.