சுமார் பதினொரு கோடியே மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் உட்பட சொத்துகளை சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், பணமோசடி சட்டத்தின் 7(1) பிரிவின் கீழ் மேற்படி சொத்துகளை கைப்பற்றியுள்ளதாக கூறினார்.
இதன்போது முடக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளையே கைப்பற்றியுள்ளதாகவும் இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி 11 கோடியே 03 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென்று தெரியவந்துள்ளதாகவும், பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.