பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் பிராந்தியத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது உடல்கள் மீட்கப்பட்டதாக பலுசிஸ்தான் சுரங்கப் பணியகப் பணிப்பாளர் நாயகம் அப்துல்லா ஷாவானி தெரிவித்துள்ளார். எரிவாயு வெடிப்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இச்சம்பவத்தையிட்டு விடுத்துள்ள அறிக்கையில், விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.