போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ சுற்றிவளைப்பின் போது பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய 186 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (28) வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களும் அவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.