போதை ஒழிப்பு விடயம் உள்ளிட்ட குற்ற தடுப்பு பணிகளிற்கு சம்பிக்க போன்றோரும் இடைஞசலாக இருக்கலாம் எனவும், எவருக்கும் அஞ்சாது பணிகள் தொடரும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திலான் அலஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமுதாய குழுக்களை தெளிவூட்டும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிசாருக்கு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதில் சிரமங்கள் இருந்தது. அதனால் அதனை இலகு படுத்துவதற்காக கிராமங்கள் தோறும் பொலிஸ் குழுக்களை உருவாக்கினோம். அதனால் யுத்திக பணிக்கு உறுதுணையாக அக்குழுக்க இருந்தது. ஆனாலும், சில இடங்களில் இருந்த குழுக்கள் இயங்காமல் இருந்தது. எனினும் குறித்த ணியை விடவில்லை. தொடர்ந்தும் முன்னெடுத்தோம். 2022ல் இந்த அமைச்சை நான் பொறுப்பு ஏற்றிருந்தேன். அ்பொழுது முழு நாடும் எரிந்து கொண்டிருந்தது. அப்போது இருந்த சிக்கலான காலத்தில் சமாதானத்தையும், அமைதியையும் பாதுகாத்து அமைதியான நிலை உருவாக்கப்பட்டது. அந்த நேரத்திலேயே ஜனாதிபதி பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதாரத்தை சீர செய்யும் போது, அமைதியை பாதுகாக்குமாறு அவர் கூறினார்.அப்போது, பொலிசாரும், இராணுவத்தினருமாக இணைந்து கட்டுப்படுத்த முடிந்தது. அதன் பின்னர் போதைப்பொருள் பிரச்சினை இருந்தது. அதன் பின்னாள் பாதாள உலக கும்பலும் இருக்கின்றது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடும் அறிமுகமும் அதிகமானது. இதனால் உங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையானதுடன், பல குடும்பங்கள் சீரழிவதையும் காண முடிந்தது. றெ்றோரின் அல்லது குடும்பத்தினரின் தங்க ஆபரணங்கள் திருடுவதும், வீட்டு பொருட்களை எடுத்து சென்று விற்று போதைப் பொருளை பயன்படுத்தும் நிலையும் அதிகரித்தது. இந்த நிலையில்தான் யுத்திய என்ற புதிய நடவடிக்கையை நாடு முழுவதும் ஆரம்பித்திருந்தோம். இந்த நடவடிக்கையின் ஊடாக உங்கள் பிண்ளைகளையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கான பணியாக முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உங்கள் பிரதேசத்தில் உள்ள சட்ட விசோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் தேவைப்படுகின்றது. அதனை அப்படையாகக்கொண்ட நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன், இந்த நடவடிக்கையில் வெற்றி பெறவும் முடியும். எவ்வாறு தகவல்களை வழங்குவது என்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஊறியிருந்தார். அவ்வாறு தகவல்களை தொலைபேசி ஊடாக வழங்கும்போது இரகசியம் பேண்படும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களை அடையாளம் காண முடியாது. உங்களது தொலைபேசி இலக்கம் மறைக்கப்பட்டிருக்கும். உங்கள் கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரிகள் இருந்தால் அவர்கள் தொடர்பில் அறியத்தாருங்கள். கடந்த 3 மாதத்தில் இறுக்கமான தீர்மானத்துன் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். போதைப்பொருள் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரித்திருந்தோம். நாங்கள் திருத்தாவின் பின்னர் நாங்கள் தேடி வரும்புாது விபரீதங்கள் நடக்கும் என எச்சரித்திருந்தோம். இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது பல்வேறு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் எமக்க வந்தது. அத்தனையையும் தாண்டியே பயணிக்கின்றோம். எந்த அழுத்தத்திற்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணியமாட்டோம். போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் அதற்கு செவிமடுக்கவில்லை. தொடர்ந்தும் நடவடிக்கையை கைவிடாது முன்னெடுத்தோம். போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணத்தை பெற்று சில சட்டததரணிகள் பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழக்கு தொடர்கிறார்கள். நாம் எதற்கும் அஞ்சாமல் பணியை தொடர்வதில் உறுதியாகவே இருக்கின்றோம் என்பதை இங்கு உறுதியாக கூறுகிறோம். கிராமங்களிலிருந்து எம்முடன் கை கோர்த்து போதைப்பொருள், பாதாள கும்பல், சட்ட விரோத செயற்பாடுகளை இல்லாது செய்ய உறுதுணையாக செயற்பட முன்வர வேண்டும் என அழைக்கின்றோம். 2002 - 2005 வரை நான் இங்கு விஜயம் செய்துள்ளேன். அப்போது யுத்தம் இடம்பெறவில்லை. ஒப்பந்த காலமாக இருந்தது. இங்குள்ள மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் தெரிவித்து முன்வந்தேன். அப்போது இங்கு கையடக்க தொலைபேசி பயன்பாடு இருக்கவில்லை. நான் தொலைபேசி நிறுவனம் ஒன்றுடன் பேசி தொலைபேசி பயன்பாட்டுக்கு உதவி செய்தேன். அப்போது இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசி அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீட்டுத்திட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணியை நிறுவனம் ஒன்று ஊடாக முன்னெடுத்தேன். மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. இதன்புாது முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள் கைவிடப்பட்டது. இங்கு மக்களிற்கு சேவை செய்தமைக்காக என்னை சிறையில் அடைத்தார். பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக என்மீது பாரிய குற்றம் வைக்கப்பட்டு போலி ஆவணங்கள் தயார் செய்து என்னை சிறையில் அடைத்தார்கள். அவ்வாறான பொய்களை சொல்லி சம்பிக்க போன்றோரே என்னை சிறையில் அடைத்தார்கள். இப்படிப்பட்ட வேலைகள், அச்சுறுத்தல்களில் ஈடுபடுபவர்களும் சம்பிக்க போன்றோர்களாகவும் இருக்கலாம். காலப்போக்கில் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக வருவேன் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வட பகுதி மக்களுக்கும் தெற்கு பகுதியில் உள்ளது போன்றதான அமைதியானதும், சுதந்திரமானதுமான நிலையை உருவாக்கி கொடுப்புாம் என சம்பிக்க போன்றோருக்கு சுற விரும்புகின்றேன். அதற்காகவே மக்களிடம் எமக்கும், பொலிசாருக்கும் ஒத்துழைக்குமாறு வேண்டுகின்றேன். எத்தனை அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அத்தனையும் தாண்டி அமைதியானதும், சுதந்திரமானதும், போதைப்பொருள் மற்றம் சட்ட விரோத செயற்பாடுகள் அற்றதுமான சூழல் உருவாக்கப்படும் என இங்கு உறுதியாக கூறுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்..!!

tubetamil
0

 போதை ஒழிப்பு விடயம் உள்ளிட்ட குற்ற தடுப்பு பணிகளிற்கு சம்பிக்க போன்றோரும் இடைஞசலாக இருக்கலாம் எனவும், எவருக்கும் அஞ்சாது பணிகள் தொடரும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திலான் அலஸ் தெரிவித்துள்ளார். 


கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமுதாய குழுக்களை தெளிவூட்டும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிசாருக்கு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதில் சிரமங்கள் இருந்தது. அதனால் அதனை இலகு படுத்துவதற்காக கிராமங்கள் தோறும் பொலிஸ் குழுக்களை உருவாக்கினோம்.


அதனால் யுத்திக பணிக்கு உறுதுணையாக அக்குழுக்க இருந்தது. ஆனாலும், சில இடங்களில் இருந்த குழுக்கள் இயங்காமல் இருந்தது. எனினும் குறித்த ணியை விடவில்லை. தொடர்ந்தும் முன்னெடுத்தோம்.

2022ல் இந்த அமைச்சை நான் பொறுப்பு ஏற்றிருந்தேன். அ்பொழுது முழு நாடும் எரிந்து கொண்டிருந்தது. அப்போது இருந்த சிக்கலான காலத்தில் சமாதானத்தையும், அமைதியையும் பாதுகாத்து அமைதியான நிலை உருவாக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே ஜனாதிபதி பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதாரத்தை சீர செய்யும் போது, அமைதியை பாதுகாக்குமாறு அவர் கூறினார்.அப்போது, பொலிசாரும், இராணுவத்தினருமாக இணைந்து கட்டுப்படுத்த முடிந்தது.

அதன் பின்னர் போதைப்பொருள் பிரச்சினை இருந்தது. அதன் பின்னாள் பாதாள உலக கும்பலும் இருக்கின்றது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடும் அறிமுகமும் அதிகமானது.

இதனால் உங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையானதுடன், பல குடும்பங்கள் சீரழிவதையும் காண முடிந்தது. றெ்றோரின் அல்லது குடும்பத்தினரின் தங்க ஆபரணங்கள் திருடுவதும், வீட்டு பொருட்களை எடுத்து சென்று விற்று போதைப் பொருளை பயன்படுத்தும் நிலையும் அதிகரித்தது.

இந்த நிலையில்தான் யுத்திய என்ற புதிய நடவடிக்கையை நாடு முழுவதும் ஆரம்பித்திருந்தோம். இந்த நடவடிக்கையின் ஊடாக உங்கள் பிண்ளைகளையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கான பணியாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உங்கள் பிரதேசத்தில் உள்ள சட்ட விசோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் தேவைப்படுகின்றது. அதனை அப்படையாகக்கொண்ட நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன், இந்த நடவடிக்கையில் வெற்றி பெறவும் முடியும்.

எவ்வாறு தகவல்களை வழங்குவது என்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஊறியிருந்தார். அவ்வாறு தகவல்களை தொலைபேசி ஊடாக வழங்கும்போது இரகசியம் பேண்படும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களை அடையாளம் காண முடியாது. உங்களது தொலைபேசி இலக்கம் மறைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரிகள் இருந்தால் அவர்கள் தொடர்பில் அறியத்தாருங்கள். கடந்த 3 மாதத்தில் இறுக்கமான தீர்மானத்துன் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

போதைப்பொருள் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரித்திருந்தோம். நாங்கள் திருத்தாவின் பின்னர் நாங்கள் தேடி வரும்புாது விபரீதங்கள் நடக்கும் என எச்சரித்திருந்தோம்.

இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது பல்வேறு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் எமக்க வந்தது. அத்தனையையும் தாண்டியே பயணிக்கின்றோம். எந்த அழுத்தத்திற்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணியமாட்டோம். 

போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் அதற்கு செவிமடுக்கவில்லை. தொடர்ந்தும் நடவடிக்கையை கைவிடாது முன்னெடுத்தோம்.

போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணத்தை பெற்று சில சட்டததரணிகள் பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழக்கு தொடர்கிறார்கள். நாம் எதற்கும் அஞ்சாமல் பணியை தொடர்வதில் உறுதியாகவே இருக்கின்றோம் என்பதை இங்கு உறுதியாக கூறுகிறோம்.

கிராமங்களிலிருந்து எம்முடன் கை கோர்த்து
போதைப்பொருள், பாதாள கும்பல், சட்ட விரோத செயற்பாடுகளை இல்லாது செய்ய உறுதுணையாக செயற்பட முன்வர வேண்டும் என அழைக்கின்றோம்.

2002 - 2005 வரை நான் இங்கு விஜயம் செய்துள்ளேன். அப்போது யுத்தம் இடம்பெறவில்லை. ஒப்பந்த காலமாக இருந்தது.  இங்குள்ள மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் தெரிவித்து முன்வந்தேன்.

அப்போது இங்கு கையடக்க தொலைபேசி பயன்பாடு இருக்கவில்லை. நான் தொலைபேசி நிறுவனம் ஒன்றுடன் பேசி தொலைபேசி பயன்பாட்டுக்கு உதவி செய்தேன்.

அப்போது இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசி அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீட்டுத்திட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணியை நிறுவனம் ஒன்று ஊடாக முன்னெடுத்தேன்.

மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. இதன்புாது முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள் கைவிடப்பட்டது. இங்கு மக்களிற்கு சேவை செய்தமைக்காக என்னை சிறையில் அடைத்தார். பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக என்மீது பாரிய குற்றம் வைக்கப்பட்டு போலி ஆவணங்கள் தயார் செய்து என்னை சிறையில் அடைத்தார்கள். அவ்வாறான பொய்களை சொல்லி சம்பிக்க போன்றோரே என்னை சிறையில் அடைத்தார்கள்.

இப்படிப்பட்ட வேலைகள், அச்சுறுத்தல்களில் ஈடுபடுபவர்களும் சம்பிக்க போன்றோர்களாகவும் இருக்கலாம். காலப்போக்கில் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக வருவேன் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
வட பகுதி மக்களுக்கும் தெற்கு பகுதியில் உள்ளது போன்றதான அமைதியானதும், சுதந்திரமானதுமான நிலையை உருவாக்கி கொடுப்புாம் என சம்பிக்க போன்றோருக்கு சுற விரும்புகின்றேன்.

அதற்காகவே மக்களிடம் எமக்கும், பொலிசாருக்கும் ஒத்துழைக்குமாறு வேண்டுகின்றேன். எத்தனை அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அத்தனையும் தாண்டி அமைதியானதும், சுதந்திரமானதும், போதைப்பொருள் மற்றம் சட்ட விரோத செயற்பாடுகள் அற்றதுமான சூழல் உருவாக்கப்படும் என இங்கு உறுதியாக கூறுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top