பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், 24 மணித்தியாலங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரபல குற்றவாளி “குடு அஞ்சு” தலைமையிலான கும்பலைச் சேர்ந்த 02 பேர், “தெமட்டகொட சமிந்த”வின் கூட்டாளிகள் 02 பேர், “கஞ்சிபானி இம்ரானின்” குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் “கொஸ்கொட சுஜீ” என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
எனினும் இதன்படி பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 03 நாட்களில் மொத்தமாக 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.