நாட்டின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக, மேலும் 2500 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 2500 மில்லியன் ரூபாவை சகல மாவட்டங்களுக்கும் விவசாயத்துறை மேம்படுத்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உபயோகிப்பதற்காக நூறு மில்லியன் ரூபா என்ற வகையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஒரு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு தொகுதிக்காக 25 மில்லியன் ரூபா என்ற வகையில், இந்நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.