அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு ,சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.
குறிப்பாக கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் 300 ரூபாய் முதல் சுமார் 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.