காசா போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை உலக அளவில் கடந்த 4 ஆண்டுகளில் நிகழ்ந்த சண்டைகளில் பலியான பிள்ளைகளைவிட அதிகம் என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு கூறுகிறது.
2019ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் நிகழ்ந்த சண்டைகளில் 12,193 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு (2023) ஒக்டோபரிலிருந்து இந்த ஆண்டு (2024) பெப்ரவரி வரை காசாவில் 12,300க்கும் அதிகமான பிள்ளைகள் பலியானதாக அறிக்கை கூறுகிறது.
‘இது சிறார் மீது நடத்தப்படும் போர். அவர்களின் குழந்தைப் பருவத்தின் மீதும் வருங்காலத்தின் மீதும் நடத்தப்படும் போர்’ என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.