இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் சிக்கியுள்ளது.
தொண்டி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா மூட்டைகளை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.