பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சீனா்கள் 5 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் சீனப் பொறியாளா்கள் பயணித்த பேருந்து மீது
வெடிபொருள்கள் நிரம்பிய வாகனத்தை பயங்கரவாதி ஒருவா் மோதி செவ்வாய்க்கிழமை தற்கொலை தாக்குதல் நிகழ்த்தினாா். இதில் சீனா்கள் சென்ற பேருந்து வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 5 சீனா்கள் உயிரிழந்தனா்.
அத்தோடு அவா்கள் கைபா் பக்துன்குவாவின் டாசு பகுதியில் நீா்மின் திட்டப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதுக்கு அவா்களின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லாய் என்பது குறிப்பிடத்தக்கது.