யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது.
காங்கேசன்துறை தெற்கு 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும், வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும், மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.