7 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் புதைபடிவம் கண்டெடுப்பு..!

keerthi
0

 


பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள
க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ளது மோன்டோலியர் (Montouliers) காட்டுப் பகுதி.

இப்பகுதியை சேர்ந்த தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Moschetti) இங்கு தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, அந்த மலைப்பகுதியில், புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டார்.

இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வை தொடங்கினர்.

ஆய்வுப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்தால், புதைபொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால் அப்பகுதி முழுவதையும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டது.

எனினும்     சுமார் 2 வருட காலம் பல முறை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட பல்வேறு ஆய்வில், டேமியனால் கண்டறியப்பட்ட புதைவடிவம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை டைனோசரின் எலும்பு கூட்டின் 70 சதவீத புதைவடிவம் என தெரிய வந்தது.

அது சுமார் 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும்     இந்த டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

"கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக க்ரூசி நகரின் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இம்முறை கிடைத்திருப்பது அந்த உயிரினத்தின் உடலில் இருந்த 70 சதவீத பெரும்பாலான பாகங்கள்" என க்ரூசி அருங்காட்சியகத்தின் நிறுவனர், பிரான்சிஸ் ஃபேஜ் (Francis Fage) தெரிவித்தார்



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top