மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி ஆயத்த நடவடிக்கை குறித்து ஆராய்வு..!!

tubetamil
0

 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் இராமகிருஷ்ணன், திணைக்கள தலைவர்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா தொடர்பாகவும் அதன்பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர், உணவு தங்குமிட ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளடங்கலாக முன்னெடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top