மின்விசிறி விழுந்ததால், காயமடைந்த மாணவர்கள் இருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (22), கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில், தரம் ஐந்து வகுப்பிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாணவனுக்கு கண்ணிலும், மற்றைய மாணவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மின்விசிறி பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.