வியர்வைத் துளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் தனியார் விருத்தக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி கனகபுரம் வீதியில் கவனயீர்ப்பு இடம்பெற்றது.
தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி விழா மண்டபத்தை வந்தடைந்தது. இதன்போது குறித்த பேரணிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பெண்களின் உரிமையை பாதுகாக்கும் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டதனை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு மகளீர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வில் கலை நிகழ்வுகளும், விழிப்புணர்வு நிகழ்வுகளும், கருத்தரங்கும் இடம்பெற்ற பின்னர் நிகழ்வில் சாதனைப் பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்
இதன்போது, கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை பெண்களிற்கு உரிமைகளை வழங்குவதில்லை. பெண்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிற்கு விடுமுறைகளை வழங்குவதில்லை.
பெண்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. இவற்றை வழங்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.