இந்தியாவுக்கும் தாய்வானுக்கும் இடையிலான நட்புறவில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களின் வெளிப்பாடாக இரு நாடுகளும் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இரு நாடுகளதும் பிரதிநிதிகளுக்கு இடையில் நீண்ட காலம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள இணப்பாட்டின் அடிப்படையில் இந்திய–தைபே சங்கமும் தைபே பொருளாதார மற்றும் கலாசார நிலையமும் இந்தியாவுடனான தொழிலாளர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தாய்வானில் தொழிலாளர் பற்றாக்குறை காணப்படும் உற்பத்தி துறை, நிர்மாணத்துறை மற்றும் விவசாயத்துறை என்பவற்றில் இந்தியர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இரு நாடுகளுக்கும இடையிலான வணிக உறவு வலுவடையவும் மக்களுக்கு இடையிலான உறவு மேம்பாடு அடையவும் தாய்வானில் இந்திய சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இவ் உடன்படிக்கை வழிவகுக்கும்.