புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி நேற்று முன்தினம் (07) அவ்வித்தியாலய மைதானத்தில் அதிபர் ந.பத்மானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல் எம்.கமலேந்திரன், ஆசிரிய ஆலோசகர் டபிள்யு.ஏ.டி.பாலித தயானந்த, இந்து ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.கலைச்செல்வன், தொழிலதிபர் ஆர்.மகாதேவன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இல்லங்களாக நாவலர் இல்லம்(சாய்கோபுர வடிவமாகவும்), விபுலானந்தர் இல்லம் (பீரங்கி வடிவமாகவும்), இளங்கோ இல்லம் (மீன் வடிவமாகவும்) அமைக்கப்பட்டது.
இறுதியில் நாவலர் இல்லம் 555 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும், இளங்கோ இல்லம் 507 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், விபுலானந்தர் இல்லம் 505 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.