வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்இராணுவ தாங்கியை ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய இராணுவம் என்ற இந்த போர் தாங்கி அவர்களின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இது நவீன தாங்கி என்று சொல்லப்படுகின்றது.
தலைவர் கிம் ஜாங் உன் இராணுவ பயிற்சியின் போது அந்த தாங்கியை ஓட்டினார்.
அத்தோடு புதிய தாங்கியின் தாக்குதல் திறன் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.