யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி - சிவபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் காட்டு யானை கூட்டம் ஒன்று தனிமையில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை தாக்கியுள்ளது.
யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.