பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்..!!

tubetamil
0

 முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலின் இறுதிச் சடங்கிற்கு வந்த பிரதமரின் விமானம் மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்க முட்பட்ட போது ஏற்பட்ட பிழையினால் அப்பகுதியிலிருந்த விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் அனைத்தும் பலத்த சேதமடைந்துள்ளன.

குறித்த விமானம் தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்றினால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது, ​​உணவு மற்றும் பானங்கள் பெற்றுக் கொண்டிருந்த உயரடுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், மாத்தறை விடுதியின் புஃபே சாப்பாட்டு மேசையில் இருந்த அனைத்து உணவுகளும் நாசமாகிவிட்டன

விமானம் சரியாக தரையிறங்காததற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, சிரமத்திற்கு உள்ளான வெளிநாட்டவர்கள் மற்றும் பிறருக்கு ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை உடனடியாக தயாரிக்க மாத்தறை விடுதியின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தில் மரத்தின் கிளை ஒன்றும் சாய்ந்து விழுந்தது.


இறுதிச் சடங்குகள் முடிந்து, முக்கியஸ்தர்கள் வரவிருந்ததால், குறித்த இடத்தை மிக விரைவாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், பிரதமர் தினேஷ் குணவர்தன விமானத்தில் இருந்து பத்திரமாக இறங்கி பின், இறுதிச் சடங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top