கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
திருமதி சுசித்ரா எல்ல கோவிட் காலப்பகுதியில் தனி ஒரு பெண்ணாக மக்களுக்கு சேவையாற்றினார். சமூகம் சார்ந்த பல சேவைகளை தொடர்ந்தும் செய்து வருகிறார். திருமதி சுசித்ரா எல்லவை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் உலகின் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கலாசார நிகழ்வுகள்,சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபில நுவான் அத்துகோரல,M. S தௌஃபீக்,பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநரின் செயலாளர் L.P மதநா யக்க,அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.