நேட்டோ அமைப்பின் 32 ஆவது உறுப்பு நாடாக சுவீடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து இந்த இராணுவ கூட்டமைப்பில் இணைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த சுவீடன் அந்த அமைப்பில் இணைவதற்கான ஆவணத்தை வொஷிங்டனில் நேற்று முன்தினம் (07) பெற்றுக்கொண்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவு நேட்டோ தற்போது வலுப்பெற்றுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோவில் இணைந்த நிலையில் அந்த நாடு மற்றும் சுவீடன் ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் எல்லையை பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.