அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறுவர் சித்திரப்போட்டியில் சாதனை படைத்த சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவன் ரீ.தினுக்சன் பாராட்டடிக் கௌரவிக்கப்பட்டார்.
சம்மாந்துறை / ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் இருந்து மாகாண மட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்ற ரீ. தினுக்சன் என்ற மாணவனுக்கு அதிபர் எஸ். இளங்கோபன் தலைமையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரக்குமார் சான்றிதழை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எச். நைறூஸ்கான் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஏ. நசீர், பி. பரமதயாளன், சித்திர பாட வளவாளர் எஸ்.எல். அப்துல் முனாப், பாடசாலையின் அதிபர் எஸ். இளங்கோபன் சித்திரம் பாட ஆசிரியை செல்வி. என். லிசாந்தனி ஆகியோரின் முன்னிலையில் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.