கஞ்சா விற்பனை கடற்படையை சேர்ந்த இருவர் கைது..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில்  கடற்படை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரையும் , அவர்களிடம் கஞ்சாவை கொள்வனவு  செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும்  ஊர்காவற்துறை பொலிஸார்  சனிக்கிழமை (23)  கைது செய்துள்ளனர் .  


கஞ்சா போதை பொருள் வியாபாரம் இடம்பெற்று  வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  குறித்த மூவரையும் கைது செய்து  04  கிலோ கிராம்,  400 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் மீட்டுள்ளனர் .

மேலும் , சந்தேக நபர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே , கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன்  அவர்களை விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி  முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top