கச்சத்தீவு விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
அத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையினால் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு அமைய, பெறப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரேந்திர மோடி தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இதன்படி, 1974ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பழமை வாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதாக இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், குறித்த விடயம் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.