ஒரு மணித்தியாலத்தில் பில்லியன் கணக்கை இழந்த மார்க்..!

keerthi
0

 


உலகெங்கிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் நேற்று முடங்கியதால் மார்க் ஜூக்கர்பர்க் $3 பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் 2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க்ரால் (Mark Zuckerberg) தொடங்கிய நிறுவனமாகும்.

எனினும்      தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் முகநூல், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய செயலிகளும் இயங்கி வருகின்றன.

உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் நேற்று(5), உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் காணொளி பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 செயலிகளும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதத்தால் குறைந்தது.

இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் $3 பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும்      குறித்த சமூகவலைத்தளங்கள் திடீரென தடைப்பட்டமை பல்வேறு தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது தொழில் நடவடிக்கைகளும் நேற்றையதினம் பாதிக்கப்பட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top