சந்தையில் இந்திய முட்டையின் விலையுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாகவும் உள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்னிலையில் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.