பொலன்னறுவை, பெதிவெவ மற்றும் சேவகம நீர் வழங்கல் திட்டங்களில் அவசர திருத்த வேலைகள் காரணமாக இன்று (01) வெள்ளிக்கிழைம மு.ப. 8 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான 10 மணிநேர நீர்வெட்டு பின்வரும் பகுதிகளில் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பெதிவெவ நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படும் பிரதேசங்கள், ஜயந்திபுர, இரிதல, லக்ஷஉயன, உனகல வெஹர, சிங்க உதாகம, தல்பொத்த, பெதிவெவ, BOP-16, சேவாகம நீர் வழங்கல் திட்டத்தினால் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகள், சேவாகம, தம்பாலை, நிசங்க மல்லபுர, பரக்கும்உயன, ஓனகம, வீரபுர ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது