வெடுக்குநாறிமலை விவகாரம்! விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள விசேட குழு

keerthi
0


வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்கப்படவுள்ளது. 

மேலும்  இந்த விசேட விசாரணை குழு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்தோடு    கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து, ஆலய நிர்வாகத்தினர் எட்டு பேரை கைது செய்யப்பட்டதுடன், தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில், பக்தர்கள் மற்றும் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கூடியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.    

 அத்தோடு    இந்த கோரிக்கைக்கு சாதகமாக பதில் வழங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, விசாரணைகளுக்காக விசேட குழு அமைக்கப்படுமென உறுதியளித்துள்ளார். 




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top