பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என தெரிவித்துள்ள அவர், எனினும் அந்த வேட்பாளர் இதுவரை பெயரிடப்படவில்லை என்றும் எவ்வாறெனிலும் எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.