மாலைதீவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க, திபெத்தில் உள்ள பனிப்பாறைகளில் இருந்து பெறப்படும் 1,500 தொன் குடிநீரை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது மாலைதீவுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக வருகிறது. குறிப்பாக நவம்பர் 2023 இல் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு பதவியேற்றதிலிருந்து இந்த ஆதரவு வழங்கப்படுகின்றது.
திபெத் தன்னாட்சிப் பகுதி, உயர்தர பிரீமியம் ரக தண்ணீரை தயாரிப்பதில் புகழ்பெற்றது.
மாலைதீவுக்கு சீனா உதவி செய்வது இது முதல் நிகழ்வு அல்ல. புதிதாக கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் மாலைதீவு சீனாவின் இராணுவத்திடம் இருந்து இலவசமாக அபாயகரமானதாக அல்லாத இராணுவ உபகரணங்களையும், பயிற்சியையும் பெறும் என்று மார்ச் மாதம் ஜனாதிபதி முய்ஸு அறிவித்தார்.
மாலைதீவுக்கான சீனாவின் உதவி வரலாற்று ரீதியாக நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாலைதீவுகள், பெரும்பாலும் பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனவையாகும். நிலத்தடி நீர் மற்றும் நன்னீரின் தீவிர பற்றாக்குறையை அந்நாடு எதிர்கொள்கிறது. இது காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கிறது.