சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் காரைநகர் - ஊரி பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது.
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர், சட்டத்தரணி திருமதி.அம்பிகா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த ஊரி கிராமமானது பெண்கள் கடற்றொழில் செய்யும் கிராமமாகவும் பொருண்மியம் நலிவுற்ற கிராமமாகவும் காணப்படுகின்றது. இந்த நிகழ்வின்போது மகளிருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. பின்னர் தெரிவு செய்யப்பட்ட பெண் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர், உத்தியோகத்தர்கள், காரைநகர் உதவி பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், ஊரி வாழ் பெண்கள் அமைப்புக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தார்கள்.