வட. மாகாண அபிவிருத்திக்கு உள்ளூர், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் தேவை..!!

tubetamil
0

 அரசசார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண ஆளுநருக்கிடையில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளும் தேவைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளதால் அதனை மீள ஒருங்கிணைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் உதவி புரிய வேண்டுமெனவும் ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் மாகாணத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் காணப்படுவதுடன், அனைத்து அரச திணைக்களங்களையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் எடுத்துக்கூறினார்.

விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், அர சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top