நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு, காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.