விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளதுடன், வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி ரம்புக்வெல்ல இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.