மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (12) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, அம்பலாங்கொடையில் நேற்று (11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், மூவர் காயமடைந்திருந்தனர்.
அத்தோடு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் டி 56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.