வலம்புரி கடத்திய பிக்கு கைது..!!

tubetamil
0

 மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபாய் பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மட்டு கல்குடா  பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர்  வியாழக்கிழமை (7) இரவு கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் வாவிடவிதானவின் வழிகாட்டலின்கீழ்  தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்   கல்குடா  தபால் கந்தோருக்கு அருகாமையில் அன்றையதினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.




இந்த நிலையில் அங்கு பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவழைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்று பொருளான வலம்புரிசங்கையும்   விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top