ரமழான் தலைப்பிறை தென்பட்டது நாளை நோன்பு ஆரம்பம்..!!

tubetamil
0

 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளைய தினம் (12) இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாவதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (11) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1445 இற்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் பல பாகத்திலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, புனித ரமழான் முதல் நோன்பை நாளை ஏப்ரல் 03 ஆம் திகதி ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக கூட்டாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top