பிரித்தானியாவில் இருந்து வந்த ஆணும் பெண்ணும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனனர்.
எனினும் இதன்போது விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல வருடங்களாக குறித்த வீட்டில் தாயும் மகனும் ஒன்றாக தங்கிருந்த நிலையில், அங்கிருந்த பொருட்களை களவாக விற்பனை செய்தமை தெரிய வந்துள்ளது.
இச் சந்தேக நபர்கள் இருவரும் இந்த வீட்டில் இருந்த 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.