வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நிகர்வில் கலந்து கொண்டனர்.
யுத்தம் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரியும்,
பால்நிலை சாத்துவம், உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு பேரணி A9 வீதி ஊடாக பசுமை பூங்காவை சென்றடைந்தது.
தொடர்ந்து, பசுமைப் பூங்காவில் 2024ம் ஆண்டு மகளீர் தின நிகழ்வு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.
சுடரேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பெண்களின் உரிமை, பால்நிலை சமத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி கருத்தரங்குகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.