இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி யாழ். முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (06)ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.
இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும்.
இதேவேளை குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ள ஜெட் விமான இயந்திரத்தை கண்காட்சியின் முடிவில், விமான படையினர் யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளனர்.