பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு புரியும் மொழியில் பதில் வழங்க தயாராக உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பல அப்பாவிகள் பலியாகியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் தேவையென்றால் அதற்குத் தயங்கப் போவதில்லை எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.