நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணியான ஜயதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரதுங்க மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் இவ்வாறு தீர்ப்பளித்தனர்.