முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு அம்பகாமம் பழைய கண்டி வீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்றுக்கொண்டிருந்த நபரை யானை தாக்கி பற்றைக்குள் வீசியுள்ளது.
கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தைச் சேர்ந்த முத்துத்தம்பி கிருஷ்ணசாமி என்ற 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்று பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம், ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் வீதிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
யானைகளின் தாக்குதலால’ தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.