முன்னாள் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மறைந்த ரொனி டி மெல்லின் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை (05) இரவு புகுந்த திருடர்கள் குழு, பெறுமதியான பல பொருட்கள் மற்றும் சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெவிநுவர 103 தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீட்டிலேயே இவ்வாறு கைவரிசை காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெவிநுவர வீட்டின் காவற்காரர், கந்தர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, ரொனி டி மெல்லின் பிரத்தியேக செயலாளர் கே.எச்.வில்பிரட், பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் கந்தரை பொலிஸாருக்கு மேலதிகமாக மற்றுமொரு பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொள்ள உள்ளது.
மறைந்த ரொனி டி மெல்லின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று ஒரு வாரமாகிற நிலையிலேயே இவ்வாறு கைவரிசை காண்பிக்கப்பட்டுள்ளது.