அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுராதபுரம் - கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.