பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தலைவர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் சில பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு இந்த தருணத்தில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதே சிறந்தது என பெரும்பாலானவர்கள் இந்த கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்டதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பேரணி குளியாப்பிட்டியவில் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இது தொடர்பாக, எதிர்வரும் நாட்களில் மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் தேர்தல் என்ன என்பதை துல்லியமாக அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.