முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு உள்ளது.
நேற்று (11.03.2024) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற பொலிஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி பயணித்த போது தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது.
இதன் போது சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.