ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி

keerthi
0

 



கடந்த 2022 பிப்ரவரி மாதம் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரிட்டு வருகிறது.

இப்பின்னணியில், பல்வேறு போர் குற்றங்கள் புரிந்ததாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் (Hague) நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) வழக்கு நடைபெற்றது.

இந்நிலையில், ரஷிய நீண்ட தூர ராணுவ விமான சேவையின் தலைவரான செர்ஜி கொபிலாஷ் (Sergei Kobylash) மற்றும் கருங்கடல் படை (Black Sea Fleet) ஆணையர் விக்டர் சொகோலோவ் (Viktor Sokolov) ஆகிய இருவரும் 2022 அக்டோபர் தொடங்கி 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பல மின்சார உற்பத்தி கிரிட்-களை முற்றிலும் நாசமாக்கிய குற்றத்திற்காக ஐசிசி (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

மின் கட்டமைப்பை நேரில் கண்டறிய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) உக்ரைனுக்கு சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) ரஷியா உறுப்பினர் இல்லை.

எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் வசம் ரஷியா ஒப்படைக்காது என தெரிகிறது.

இந்த தீர்ப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) வரவேற்றுள்ளார்.

அத்தோடு      கடந்த வருடம், ஐசிசி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் வேறொரு அதிகாரி ஆகியோர், உக்ரைனிலிருந்து அந்நாட்டு சிறுவர்களை ரஷியாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தி "வாரண்ட்" பிறப்பித்தது.

ஆனால், இதனை புறக்கணித்த ரஷியா, பதிலடியாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிஞருக்கும் "வாரண்ட்" பிறப்பித்தது.

அத்தோடு      நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா.வின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வேறு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top